1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2017 (15:13 IST)

குஜராத்தில் கூட்டணி சாத்தியமில்லை: சீறும் ஜெட்லி!!

குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. 
 
கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் துணையாக இருந்த பட்டேல் சமூகத்தினர் தற்போது பாஜக-வை எதிர்பத்து வருகின்றனர்.   
 
இதனால், காங்கிரஸுக்கு ஆதாயம் கிடைத்துள்ளது. பட்டேல் சமூகத்தினரின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்று கொண்டது. அதாவது, பட்டேல் இனத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 
 
இந்த தகவலை பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்தீக் பட்டேல் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னர் ஒரு மாதத்திற்குள் பட்டேல் இனத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மசோதா ஒன்றை நிறைவேற்ற வேண்டும் எனவும் இட ஒதுக்கீடு கொள்கை பற்றி தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இனியும் குஜராத்தில் இடஒதுக்கீடு வழங்க சாத்தியமில்லை என்று தெரிந்தும் காங்கிரஸ் - பட்டேல் குழு நாடகம் ஆடுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
 
மேலும், காங்கிரஸ் - பட்டேல்கள் அமைத்திருப்பது ஒரு மோசடி கூட்டணி. இனி சட்டப்படியும், அரசியலமைப்பும் படியும் இட ஒதுக்கீடு சாத்தியமில்லை என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே இவர்கள் இணைந்துள்ளார்கள் என கூறியுள்ளார்.
 
அதோடு ஒரு மாநிலத்திற்கு 50 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு சாத்தியம். அதை மீறி வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.