வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (13:26 IST)

முன்னாள் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு: மனைவிக்கும் பாதிப்புக் என தகவல்!

முன்னாள் பிரதமர் மற்றும் அவருடைய மனைவிக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவருடைய மனைவி சென்னம்மா ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து தனது டுவிட்டரில் தேவகெளடாவும் உறுதி செய்துள்ளார்
 
முன்னாள் பிரதமர் தேவகெளடா தனது டுவிட்டரில், ‘எனக்கும் என்னுடைய மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இருவரும் நலமாக உள்ளோம். எனவே கட்சி உறுப்பினர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் 
 
முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவருடைய மனைவி தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 1996ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் 1997 ஏப்ரல் 21ம் தேதி வரை தேவகௌடா பிரதமராக இருந்தார் என்பதும், அதற்கு முன்னர் அவர் கர்நாடக மாநில முதல்வராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது