திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (15:01 IST)

திஹார் சிறையில் துளிர்விட்ட அருண் ஜெட்லியின் அரசியல் வேட்கை!!

மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று மரணித்ததையடுத்து அவரை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
 
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் 12.07 மணிக்கு  காலமானார். அவருக்கு வயது 66. 
 
அவரது மரணம் பாஜகவிற்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அருண் ஜெட்லியின் வாழ்க்கை பயணம் குறித்து பல சுவாரஸ்ய தவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த தொகுப்பு அவரது அரசியல் ஆரம்பத்தைப்பற்றியது... 
 
1975 ஜூன் 25 டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் அப்போதைய தலைவரான அருண் ஜெட்லி டெல்லி நாராயணா பகுதியில் தன் இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.
திடீரென வெளியில் சப்தம் கேட்டு எழுந்த அவர் வெளியே காவல் துறையினர் அவரது அப்பவை கைது செய்ய வந்திருப்பதை கண்டார். உடனே வீட்டின் பின்வாசல் வழியாக அங்கிருந்து தப்பி அன்றையை இரவை நண்பர் ஒருவரது வீட்டில் கழித்தார். 
 
மறுநாள் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களை, பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகத்துக்கு எதிரே திரட்டினார். கூட்டத்தை திரட்டி உரையாற்றியதும் இந்திரா காந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
 
நிலமை மோசமானதை உணர்ந்த காவல் துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதோடு அருண் ஜெட்லியையும் கைது செய்தனர். திஹார் சிறையில் அருண் ஜெட்லி அடைக்கப்பட்டார். 
அதில் வினோதம் என்னவெனில் அருண் ஜெட்லி, அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி, கே.ஆர். மல்கானி ஆகிய 11 பேர் இருந்த அறையில் அடைக்கப்பட்டார். இதுவே அருண் ஜெட்லியின் அரசியல் பயணத்திற்கு துளிராய் அமைந்தது. 
 
சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதும், அரசியல்தான் தனது எதிர்காலம் என்று முடிவெடுத்த அருண் ஜெட்லி தனது அரசியல் பயணத்தை அன்று முதலே துவங்கினார்.