திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 4 மே 2018 (15:17 IST)

வெளிநாட்டு பெண் பலாத்காரம் செய்து கொலை - 2 பேர் கைது

கேரளாவில் வெளிநாட்டுப் பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற,  லாட்வியா நாட்டைச் சேர்ந்த லிகா ஸ்குரோமேனி(33) என்ற பெண் தனது சகோதரியுடன் கேரளாவிற்கு சென்றார்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் சகோதரி தனது தங்கையான லிகாவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், கோவளம் பீச் அருகே லிகாவை பிணமாக மீட்டனர். 
 
இந்த கொடூர செயலை செய்த உமேஷ், உதயன் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.