திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (18:20 IST)

ஐபோன் 13 ஆர்டர் செய்த நபருக்கு அடித்த ஜாக்பாட்: பிளிப்கார்ட் வினோத டெலிவரி!

iphone delivery
ஐபோன் 13 ஆர்டர் செய்த நபருக்கு அடித்த ஜாக்பாட்: பிளிப்கார்ட் வினோத டெலிவரி!
பிளிப்கார்ட் அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனத்திடம் ஒரு பொருளை ஆர்டர் செய்தால் அந்த பொருளுக்கு பதிலாக சோப்பு உள்பட ஒரு சில பொருள்கள் டெலிவரி செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஐபோன் 13 போன் ஆர்டர் செய்தவருக்கு ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடியில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஐபோன் 13 ஆர்டர் செய்து இருந்தார். அதற்காக அவர் 49 ஆயிரம் ரூபாய் கட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அவருக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபோன் 13க்கும் 14க்கும் இடையே உள்ள வித்தியாசம் பல ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு பிளிப்கார்ட்டின் வினோத டெலிவரி என்று தெரிவித்துள்ளார்.
 

Edited by Mahendran