1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:36 IST)

ஆப்பிள் ஐபோன் 13 - ஐபோன் 14 இரண்டுக்கும் விலை மட்டுமே வித்தியாசம்: பயனர்கள் அதிருப்தி

iphone14
ஆப்பிள் ஐபோன் 13 - ஐபோன் 14 இரண்டுக்கும் விலை மட்டுமே வித்தியாசம்: பயனர்கள் அதிருப்தி
ஆப்பிள் ஐபோன் 14 நேற்று வெளியாகியுள்ள நிலையில் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு மாடல்களிலும் ஒரே ஒரு வித்தியாசம் விலைதான் என்றும் வேறு எந்த மாற்றமும் இல்லை என்றும் பயனர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் மகள் ஈவ் ஜாப்ஸ் அவர்கள் கூட ஆப்பிள் 14 மாடலை கேலி செய்து தனது இன்ஸ்டாகிரமைல் பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஆப்பிள் ஐபோன் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய மாடலில் எந்தவிதமான புதிய அம்சம் இல்லை என்றும் அதே போல் தான் ஆப்பிள் 14 மாடலிலும் உள்ளது என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்தியாவில் ஐபோன் 14 விலை  128ஜிபி மாடல் ரூ.79,900 எனவும், ஐபோன் 14 பிளஸ் மாடல் விலை ரூ.89,900 என்றும், ஐபோன் 14 ப்ரோ மாடலின் விலை ரூ.1,29,900 என்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,39,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.