திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (09:28 IST)

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டுமா? – இன்று முதல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரிய இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரிய மின்கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்கும் அறிவிப்பை சமீபத்தில் தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதை தொடர்ந்து ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

பலரும் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து பல சிரமங்களை அனுபவிப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் மின்சார வாரியமே ஆதார் இணைப்பு சிறப்பு முகாமை இன்று முதல் தொடங்கி நடத்துகிறது.

இன்று முதல் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை மின்வாரிய அலுவலகங்கள் அனைத்திலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். அங்கு ஆதார் கார்டு மற்றும் மின் இணைப்பு அட்டையை கொண்டு சென்று உங்கள் ஆதார் எண்ணை மின்வாரிய இணைப்புடன் இணைக்கலாம். செல்லும்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணையும் எடுத்து செல்வது அவசியம். பண்டிகை விடுமுறை தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் இந்த முகாம் செயல்படும்.

Edit By Prasanth.K