1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Coronavirus confirmed to someone from Tamil Nadu

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது !

தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது !

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இத்தால், ஓமன், ஈரான், இங்கிலாந்து,அமெரிக்கா, ஜெர்மனி ,தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவிய நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இதில், 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தலவல்கள் வெளியாகிறது. 
 
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரானா பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
ஈரானுக்கு சென்று வந்த லடாக்கைச் சேர்ந்த இருவர் மற்றும் ஓமனில் இருந்த தமிழகத்துக்கு வந்த ஒருவர் என மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்  காந்தி மருத்துவமனையில் அவருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
அடுத்த கட்டுரையில்
மனிதநேயம் இன்னும் இறக்கவில்லை...வாகனம் விபத்துக்குள்ளானபோது ... வைரலாகும் வீடியோ