வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (12:04 IST)

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. இலியானா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
விஜய் நடித்த நண்பன் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை இலியானா. இவர் கடந்த சில வருடங்களாக  பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சகோதரருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் அதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 
 
இந்த நிலையில் நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமணத்திற்கு முன்பே இலியானா கர்ப்பமானதை அடுத்து அவரது கர்ப்பத்திற்கு யார் காரணம்? அவரது காதலர் யார்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு விரைவில் இலியானா பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran