ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (12:19 IST)

விடுங்க நான் பாதிரியாரா போறேன்..! – சர்ச்சை பாதிரியார் ஆன்றோவுக்கு ரசிகர் மன்றம்!

Poster
சமீபத்தில் பாலியல் சர்ச்சையில் சிக்கி கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு ரசிகர் மன்றம் தொடங்கி சிலர் பேனர் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்த குடையால்விளை பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ. 29 வயதாகும் இளம் பாதிரியாரான பெனடிக்ட் ஆன்றோ கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள பல சர்ச்சுகளில் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது சர்ச்சுக்கு வரும் சில பெண்களிடம் நெருங்கி பழகிய பெனடிக்ட் ஆன்றோ அவர்களோடு உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளார். இதுதொடர்பான வாட்ஸப் சாட், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த ஆன்றோ கைது செய்யப்பட்டார்.

சமூக வலைதளங்களில் ஆன்றோவின் சாட்டிங் லீலைகள் வெளியான நிலையில் பல சிங்கிள்கள் தானும் பாதிரியார் ஆக போவதாக விளையாட்டாக சொல்ல ஆரம்பித்தனர். அது தற்போது பேனர் அடிக்கும் வரை சென்றுள்ளது. திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சமீபத்தில் திருமணம் ஒன்றிற்கு பேனர் அடித்துள்ளனர்.

அதில் “ஊர்ல 10, 15 லவ்வர் வச்சுருக்கவன் எல்லாம் சந்தோசமா இருக்கான் நான் பாவமன்னிப்பு குடுத்தது தப்பாடா” என்ற வாசகமும், “என்னை விடுங்கடா நான் பாதிரியாரா போறேன்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆன்றோ கைது செய்யப்பட்ட புகைப்படத்தில் மணமகன், நண்பர்கள் படத்தை மார்பிங் செய்துள்ளனர். அதில் தீவிர பெனடிக்ட் ஆன்றோ தலைமை ரசிகர்கள் என்றும் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K