வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 மார்ச் 2020 (08:39 IST)

டிரம்ப் கலந்து கொண்ட மாநாட்டில் கொரோனா நோயாளி: அதிர்ச்சி தகவல்

சீனாவில் வூகான் என்ற பகுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் படிப்படியாக சீனா முழுவதும் பரவி இரண்டாயிரத்துக்கும் அதிகமான அவர்களை பலி வாங்கிவிட்டது. இந்த நிலையில் சீனாவில் நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் படுத்தப்பட்டு கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
 
இருப்பினும் சீனாவையும் தாண்டி அண்டை நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் குறிப்பாக அமெரிக்காவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்ட மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து அந்த மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப் உள்பட அனைவருக்கும் கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் டிரம்ப் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் அவர் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென ஒருவருக்கு கொரோனா தாக்குதல் வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்ததால் உடனடியாக அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தபோது அவருக்கு ஒரு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொண்ட மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கே கொரோனா  வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது