ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (10:11 IST)

குஜராத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம்: ராமர், சீதை வேடமணிந்து சென்ற பயணிகள்

அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளதை அடுத்து நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சிறப்பு விமானம் இன்று அயோத்திக்கு கிளம்பிய நிலையில் இந்த விமானத்தில் சென்ற பயணிகள் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் வேடம் அணிந்து சென்ற காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது.  
 
மேலும் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து விமான நிலைய ஊழியர்களுடன் இணைந்து முதல் விமானம் அயோத்திக்கு கிளம்ப இருப்பதை அடுத்து கேக் வெட்டி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரமாகுவார்கள்
 
ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக வேடமணிந்து அயோத்திக்குச் செல்லும் பயணிகள் விமான நிலையத்தில் ஊழியர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடுவது நிச்சயமாக ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது என்று பயணி ஒருவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran