திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (12:58 IST)

சுற்றுலா படகில் தீ விபத்து - 120 பேரின் நிலை என்ன?

ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் 120 பயணிகளுடன் சென்ற படகு தீவிபத்துக்களாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் இன்று காலை 120 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த படகில் தெலங்கானா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த பலர் பயணம் செய்தனர்.
 
இந்நிலையில் படகு ஆற்றின் மையப் பகுதிக்கு சென்றபோது, மின்கசிவின் காரணமாக படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயணம் மேற்கொண்டதே இந்த விபத்திற்கான காரணம் எனத் தெரிவந்துள்ளது.
இதனையடுத்து தற்பொழுது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படகில் பயணித்தவர்களின் நிலைமை குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.