திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 13 மார்ச் 2024 (14:01 IST)

ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி..! காங்கிரஸ் அறிவிப்பு..!!

congress leaders
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
 
காங்கிரஸ் கட்சி மகளிர் நீதி உத்தரவாதத்தின் கீழ் 5 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. 
 
அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவுத் திட்ட பணியாளர்களுக்கான மாத ஊதியம் இரட்டிப்பாகும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. அதேபோல மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு சாவித்ரி பாய் புலே விடுதி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 


ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.