வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:45 IST)

அடடா... பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்த மாநிலங்கள்!!

பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் நாட்டின் சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரி சதவீதங்களை குறைத்துள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதாவது ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்களிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லாமல் அதே விலையில் விற்பனை ஆகி வந்தது. 
 
இந்நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  ஆம், பெட்ரோல் விலை இன்று சென்னையில் 31 காசுகள் உயர்ந்து 92.90 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. 
 
அதே போல் டீசல் விலை 33 காசுகள் விலை உயர்ந்து 86..31 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் நாட்டின் சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரி சதவீதங்களை கனிசமாக குறைத்துள்ளது. 
 
1. முதல் மாநிலமாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான் மாநில அரசு 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக குறைத்துள்ளது. 
 
2. மேற்குவங்க மாநிலத்தில் எரிபொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 
 
3. அசாம் மாநிலத்தில் எரிபொருட்கள் மீது கொரோனா நிதியாக விதிக்கப்பட்ட 5 ரூபாய், திரும்ப பெறப்பட்டுள்ளது.
 
4. மேகாலயாவில் பெட்ரோல் விலையில் 7 ரூபாய் 40 காசுகளும், டீசல் விலையில் 7 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. மதிப்புகூட்டு வரி 2 ரூபாயும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
5. நாகாலாந்தில் பெட்ர்ரொல் வரி 29.08 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும், டீசல் வரி 17.50 சதவீதத்தில் இருந்து 16.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
 
இது போல தமிழகத்திலும் வரி சதவீதம் குறைக்கப்பட வேண்டுமென எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.