திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (07:26 IST)

வாட் வரியை குறைத்ததால் ரூ.7 குறைந்த பெட்ரோல் விலை: முன்னுதாரணமான மாநிலம்!

வாட் வரியை குறைத்ததால் ரூ.7 குறைந்த பெட்ரோல் விலை
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை 20 முதல் 30 காசுகள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் ரூபாய் 90 தாண்டி உள்ள பெட்ரோல் விலை ஒரு சில மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதே ரீதியில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் எந்த மாநில அரசும் சரி மத்திய அரசும் சரி இதனை கண்டுகொள்ளாமல் உள்ளது 
 
இந்த நிலையில் முன்னுதாரணமாக மேகாலயா மாநிலத்தில் வாட் வரி குறைக்கப்பட்டது. மேகலாயாவில் வாட் வரி அம்மாநில அரசு கணிசமாக குறைந்ததால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ரூபாய் 5 முதல் 7 வரை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேகாலயா மாநிலத்தை பின்பற்றி மற்ற மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.