1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:01 IST)

மோடி வாங்க நினைக்கும் அதிநவீன பிரிடேட்டர் டிரோன்களின் சிறப்புகள் என்ன?

அமெரிக்காவின் அதிநவீன பிரிடேட்டர் ரகத்தை சேர்ந்த டிரோன்களின் சிறப்பம்சங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
கடந்த 2017 ஆம் ஆண்டு மோடி அமெரிக்கா சென்ற போது இந்த பிரிடேட்டர் டிரோன்களை வாங்க அன்றைய அதிபர் டிரம்ப்புடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது இந்த ஒப்பந்தம் நிறைவேறவில்லை. 
 
இந்நிலையில் இப்போது அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவின் அதிநவீன பிரிடேட்டர் ரகத்தை சேர்ந்த டிரோன்களை ரூ.2100 கோடிக்கு வாங்க திட்டமிட்டுள்ளார். இந்த டிரோன் குறித்த விவரங்கள் பின்வருமாறு... 
 
1. அமெரிக்க விமானப்படையால் எம்க்யூ-9 ரீப்பர் என்று பெயரிடப்பட்ட, பிரிடேட்டர் பி என்பது நீண்ட தூரம் பறக்கும் அதிநவீன டிரோன்.
 
2. இது அதிக உயரத்தில் இருந்து உளவு பார்ப்பது மட்டுமின்றி தகுந்த நேரத்தில் தாக்குதல் நடத்தும் திறனும் படைத்தது. இது வேட்டைக்காரன் என்றும் அழைக்கப்படுகின்றன.
 
3. இந்த டிரோன்கள் 712 கிலோ வாட் குதிரை திறன், டர்போ இன்ஜினை கொண்டது.
 
4. அதிகபட்சமாக 50 ஆயிரம் அடி உயரத்தில் 27 மணி நேரம் நிலைத்து பறந்து, எதிரிகளின் இலக் கை துல்லியமாக தாக்கும்.