தொடர்புடைய செய்திகள்
- கழகத்தின் திமிங்கலங்களுக்கு பாஜக வலை?? திமுக கூடாரமாகும் பாஜக!
- குற்றமற்ற ஒற்றை தலைவா.. திசைகளெட்டும் சுற்றும் இளைஞா! – ட்ரெண்டாகும் நமோ ஆந்தம்!
- யார் பெரிய ஆளு? பிரதமரா? பெரியாரா? – ட்விட்டரில் வலுக்கும் சண்டை!
- சிலிண்டர் வெடிப்பு மரணங்கள்! இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம்!
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு – சூர்யா நன்றி
அதிமுகவிடம் டீல் பேசுகிறதா திமுக கூட்டணி கட்சிகள்?! – அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக கூட்டணி கலையலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணியில் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
,முன்னதாக அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தனித்து தேர்தலை எதிர்கொள்ள ஆலோசித்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். அப்போது தங்களை கூட்டணிக்கு அழைக்க திமுக, அதிமுக இரு கட்சிகளுமே பேசி வருவதாக கூறினார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சிறு சிறு கட்சிகள் முதற்கொண்டு கூட்டணிக்குள் கொண்டு வர இரு பெரும் கட்சிகளும் முயற்சிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் தேர்தல் குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணி கட்சிகள் பல அதிமுகவில் கூட்டணி அமைக்க வரலாம் என தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா வருகை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
