வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 டிசம்பர் 2020 (14:26 IST)

விவசாயிகள் போராட்டத்தில் கலவரம்: எச்சரிக்கும் உளவு அமைப்பு!

விவசாயிகளின் போராட்டத்துக்குள் சமூக விரோத சக்திகள் புகுந்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. 
 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் 17 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பந்த் நடைபெற்றது. 
 
இந்த போராட்டம் தொடர்ந்துக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்தும் அடுத்தடுத்த பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக்கொள்ள டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 
 
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்குள் சமூக விரோத சக்திகள் புகுந்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
 
விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் திசை திருப்பி கொண்டு செல்லும் அபாயம் இருப்பதாக மத்திய உள்துறைக்கு உளவு அமைப்புகளும் தகவல் கொடுத்து எச்சரித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.