வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:52 IST)

டெல்லியில் பெண் வன்கொடுமை செய்து எரித்து கொலை! – மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

டெல்லியில் துவாரகா பகுதியில் பெண் ஒருவர் 17 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் துவாரகா பகுதியில் குப்பை தொட்டி அருகே பெண் ஒருவரது சடலம் துணியால் சுற்றப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அந்த பெண்ணின் புகைப்படத்தை அனுப்பியும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்திய போலீஸார் இறுதியாக 17 வயது சிறுவனை கைது செய்தனர். சிறுவனிடம் நடத்திய விசாரணையில் 32 வயதான அந்த பெண்ணை சிறுவன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, தான் சிக்கிவிட கூடாது என்பதற்காக பெண்ணை கொன்று, பிறப்புறுப்பை எரித்து கால்வாயில் பெண்ணை வீசிவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.