1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (08:35 IST)

இந்த வரைவு அறிக்கை திருப்தியாக இல்லை! – மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய விவசாயிகள்!

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் விவசாயிகள் கோரிக்கை குறித்து மத்திய அரசு அனுப்பிய வரைவு அறிக்கையை விவசாயிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். தற்போது நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கை குறித்த வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்து மத்திய அரசு விவசாய சங்கத்தினருக்கு அனுப்பி இருந்தது. ஆனால் வரைவு அறிக்கை திருப்திகரமாக இல்லை என கூறி விவசாய சங்கத்தினர் மத்திய அரசுக்கே அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளனர். வரைவு அறிக்கையில் திருத்தம் செய்து திருப்பி அனுப்பியுள்ளதாகவும், அதுகுறித்த மத்திய அரசின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.