செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (07:45 IST)

விவசாயிகளுடன் இன்று 11வது கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு ஏற்படுமா?

மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு இதுவரை 10 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 10 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 11 வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 
 
இந்த நிலையில் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும் அன்று டிராக்டர் பேரணி நடத்துவது தொடர்பாக காவல் துறையினருக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது 
 
சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதால் டெல்லிக்கு வெளியே டிராக்டர் பேரணியை நடத்திக் கொள்ளலாம் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் டெல்லியில் தான் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என்றும் அதுவும் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் இடத்தில் தான் நடத்துவோம் என்றும் விவசாய அமைப்புகள் உறுதியாக உள்ளன. ஒருபக்கம் இதுகுறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது