ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2021 (07:40 IST)

இன்று நடைபெறவிருந்த 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து: நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசு சமீபத்தில் 3 புதிய வேளாண் மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாக்களை அமல்படுத்தக் கூடாது என்று என்பதை வலியுறுத்தி வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இந்த போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டும் இதுகுறித்து அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் இதுவரை 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்துகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மீண்டும் பத்தாம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த பேச்சுவார்த்தை இன்று ரத்து செய்யப்படுவதாகவும் அதற்கு பதிலாக நாளை பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்