ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (10:42 IST)

இதுக்கு இல்லையா ஒரு எண்டு? தொடரும் பேச்சுவார்த்தை தோல்வி! – பின்வாங்காத விவசாயிகள்!

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் சமரசம் ஏற்படாததால் நாடு தழுவிய பந்த் நடத்த விவசாயிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இன்றுடன் 11 நாட்களாக தொடரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசும் முடிந்த அளவு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நாடு முழுவதும் வரும் 8ம் தேதி பந்த் நடத்த இருப்பதாக விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் டிசம்பர் 9 தேதி மத்திய அரசு விவசாய சங்கத்தினரை அழைத்து 6ம் கட்ட பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இதனால் 8ம் தேதி பந்த் நிறுத்தப்படுமா என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ள விவசாய சங்கத்தினர் அரசு பேச்சுவார்த்தை நடத்தினாலும் திட்டமிட்டபடி 8ம் தேதி பந்த் நடைபெறும் என கூறியுள்ளனர்.