1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (11:27 IST)

பொங்கல் வின்னர் ‘அயலான்’ படம் தானா? குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்..!

பொங்கல் திரைப்படங்களாக சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ அருண்விஜய் நடித்த ’மிஷன் சாப்டர் ஒன்’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. 
இந்த நிலையில் இந்த படங்களை விமர்சனங்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கும் நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  
 
ஆனால் ‘அயலான்’ படத்திற்கு பாசிட்டிவ் வசனங்கள் வந்து கொண்டிருப்பதால் பொங்கல் ரிலீசில் இந்த படம் தான்  வின்னர் என்று கூறப்படுகிறது. மிஷன் சாப்டர் ஒன்’ படத்தின் விமர்சனங்கள் பெரிதாக வரவில்லை. ஆனால் மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படத்திற்கு ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் இது ஒரு இந்தி படம் என்ற முத்திரையை தமிழ் ரசிகர்களால் குத்தப்பட்டுள்ளது.  
 
எனவே பொங்கல் வின்னர் ‘அயலான்’ படமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும்  இன்று வெளியாகியுள்ள நான்கு படங்களில் எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran