புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 பிப்ரவரி 2019 (06:59 IST)

சி.பி.ஐ. தனது வேலையை செய்ய வேண்டுமா? வேண்டாமா? மம்தாவுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி

மேற்குவங்க மாநிலத்தில் அம்மாநிலத்தின் காவல்துறைக்கும் சிபிஐ அதிகாரிகளுக்கும் எழுந்துள்ள மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க காவல்துறை ஆணையரை பார்க்க வந்த சிபிஐ அதிகாரிகள் ஐவர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட விவகாரம், சிபிஐ-போலீஸ் மோதலை தாண்டி மோடி-மம்தா அரசியலாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  சி.பி.ஐ. தனது வேலையை செய்ய வேண்டுமா? வேண்டாமா? என கேள்வி எழுப்பியதோடு, சி.பி.ஐ. தனது வேலையை செய்யும்போது, பழிவாங்கல் என சொல்வதும், அவர்கள் கேட்பதை செய்யாமல் இருந்தால் சி.பி.ஐ. கூண்டுக்கிளி என்றும் விமர்சிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் வரும் மக்களவை தேர்தலில் பாஜக யாருடன் கூட்டணி என்பதை தமிழக பாஜக தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என்றும், பாஜகவை பற்றிய பொய் பரப்புரை தமிழகத்தில் எடுபடாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயத் திட்டங்கள் விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.