1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (19:02 IST)

முன்ஜென்மத்தில் நான்தான் உன் கணவன்; ஐடி பெண்ணை ஏமாற்றிய போலி சாமியார்

சைலால் ஜேதியா என்ற போலி சாமியார் முன்ஜென்மத்தில் நான்தான் உன் கணவர் என கூறி ஐடி பெண்ணை ஏமாற்றியுள்ளார்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மிகவும் புகழ்பெற்ற சாமியாராக திகழ்ந்து வந்தார் சைலால் ஜேதியா. இவர் தன்னை சந்திக்க வரும் பக்தர்களுக்கு முன் ஜென்மம் குறித்து விளக்குவது, நோய்களை குணமாக்கும் வழிகளை சொல்வது என பல விஷயங்கள் செய்து வந்துள்ளார். இதன்மூலம் அவர் செய்யும் சேவைகளுக்கு 3 லட்சத்திற்கு குறையாமல் பணம் வசூலித்து வந்துள்ளார்.
 
இவரிடம் ஆசி பெற வந்த ஐடி பெண் ஒருவரை, முன்ஜென்மத்தில் நான்தான் உன் கணவர். நாம் ஒன்றாக பல காலம் வாழ்ந்தோம் என்று பலவிதமாக கதை கூறியுள்ளார். இதையும் அந்த பெண் அப்படியே நம்பியுள்ளார். இதை பயன்படுத்தி சாமியார் அந்த பெண்ணை பலமுறை வன்புணர்வு செய்துள்ளார். 
 
அதோடு அந்த பெண்ணின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அந்த பெண்ணின் தந்தையை குணப்படுத்துவதாக கூறி பணம் பறித்துள்ளார். தந்தை உடல்நிலையில் மாற்றம் இல்லாமல் இருந்ததையடுத்து அந்த பெண் சாமியாரிடம் செல்வதை குறைத்துள்ளார். 
 
இந்நிலையில் சாமியார் அந்த பெண்ணிற்கு சிடி ஒன்றை அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர் அந்த பெண் தானே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் இரண்டு நாட்களுக்கு சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.