1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2017 (13:28 IST)

நிர்வாண பூஜைக்கு அழைத்து நெருக்கமாக இருக்க வலியுறுத்திய போலி சாமியார்!

நிர்வாண பூஜைக்கு அழைத்து நெருக்கமாக இருக்க வலியுறுத்திய போலி சாமியார்!

திருச்சியில் பெண் ஒருவரை போலி சாமியார் நிர்வாண பூஜைக்கு அழைத்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் பூஜை முடிந்ததும் தன்னுடன் நெருக்கமாகவும் நெருக்க வேண்டும் என அந்த போலி சாமியார் வலியுறுத்தியது தெரியவந்துள்ளது.


 
 
திருச்சி மேலபுலிவார்டு பகுதியை சேர்ந்த 36 வயதான கவிதா என்பவர் எலக்ட்ரிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் என்பவரை சந்தித்துள்ளார். அவர் சில பூஜைகள் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறி சில பூஜைகள் செய்துள்ளார்.
 
மேலும் கவிதாவிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு தான் நடத்தும் ஷாப்பிங் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறியுள்ளார் மாரியப்பன். பின்னர் தொழில் மேலும் உச்சமடைய தேக சுத்தி எனப்படும் நிர்வாண பூஜை நடத்த வேண்டும் எனவும் பூஜையின் முடிவில் தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் எனவும் கவிதாவை மாரியப்பன் வலியுறுத்தியுள்ளார்.
 
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன்னுடைய 5 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மரியப்பன் பணத்தை கொடுக்காமல் அந்த பெண்ணை நேரிலும், போனிலும் மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் மாரியப்பன் மீது போலீசில் புகார் அளித்தார்.
 
இதனையடுத்து தலைமறைவான மாரியப்பனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சியில் மறைந்திருந்த மாரியப்பனை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் அவர் போலி சாமியார் என்பதும், இதே போல பல ஊர்களில் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.