பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்; மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம்!
பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பெகாசஸ் செயலி மூலமாக இந்திய அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களை ஒட்டு கேட்டதாக வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 500க்கும் மேற்பட்டோர் இந்த விவகாரத்தை விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என ஏற்கனவே எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.