செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (10:41 IST)

மூன்றாவது அலைக்கு இப்போ வாய்ப்பில்லை… ஆனால்? – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வரும் நிலையில் தற்போது மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கொரோனா கோர தாண்டவம் ஆடிய நிலையில் இரண்டாம் அலை பரவலால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாதிப்புகள் அதிகமானது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா மெல்ல குறைந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து பேசியுள்ள மருத்துவ ஆய்வாளர்கள் மூன்றாவது அலை தற்போது பரவும் அபாயம் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அதே சமயம் அடுத்த ஆண்டு நடுவிலோ அல்லது இறுதி மாதங்களிலோ மூன்றாவது அலை பரவ சாத்தியம் உள்ளதாகவும், பெரும்பாலும் 30 வயதிற்குட்பட்டோர் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.