திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 டிசம்பர் 2025 (09:48 IST)

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இன்று பங்கு சந்தை வர்த்தகம் காலையில் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 395 புள்ளிகள் சரிந்து 84,873 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 132 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட்ஸ், இந்துஸ்தான் லீவர், இன்டிகோ, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட ஒரு சில பங்குகளின் விலைகள் மட்டுமே உயர்ந்துள்ளன. இந்த சில பங்குகளைத் தவிர, நிப்டியில் உள்ள மற்ற அனைத்து பங்குகளும் வரிவில் வர்த்தகமாகி வருவது சந்தையில் ஒரு அழுத்தமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. 
 
உலகளாவிய சந்தை நிலவரங்கள் மற்றும் லாபத்தை முதலீட்டாளர்கள் வெளியே எடுப்பதே இந்த சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த திடீர் வீழ்ச்சி முதலீட்டாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva