செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (16:01 IST)

இந்தியாவின் முதல் ‘இ-டபுள் டக்கர்' பேருந்து: 90 பேர் பயணம் செய்யலாம்..!

double
இந்தியாவின் முதல் ‘இ-டபுள் டக்கர்' பேருந்து: 90 பேர் பயணம் செய்யலாம்..!
இந்தியாவின் முதல் இ-டபுள் டக்கர் பேருந்து இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் ‘இ-டபுள் எலக்ட்ரிக் பேருந்து மும்பையில் இன்று தனது சேவையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த டபுள் டக்கர் பேருந்தில் 90 பேர் வரை உட்கார்ந்து பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகர போக்குவரத்து கழகம் 200 ‘இ-டபுள் டக்கர் எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது என்றும் முதல் கட்டமாக சில பேருந்துகள் மட்டும் மும்பையில் சேவையை தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பேருந்துகளுக்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் இந்த பேருந்து அறிமுகம் செய்யப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran