1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. exam superintendent suspend in karnataka

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி கேட்ட கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்: கர்நாடகாவில் பரபரப்பு

ஹிஜாப்
ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கேட்ட கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில் பல மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வருவதால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை 
 
தேர்வு நேரம் என்பதால் ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல மாணவிகள் தேர்வு எழுதாமல் திரும்பி சென்று விட்டனர் 
 
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதி கேட்ட கண்காணிப்பாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
6 மணி நேரம் கெடு, முடிந்தால் கைது செய்யுங்கள்: தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்!