1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (15:38 IST)

வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.! மோகன் பகவத் வலியுறுத்தல்..!!

Mohan Bagavath
வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
 
இட ஒதுக்கீடு விவகாரத்தில் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறையாளர்கள், இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்களின் வீடுகள், சொத்துகள், கோயில்களை சூறையாடினர். இதனால் அங்குள்ள இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 

இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலத்தில் தேசிய தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வருங்கால தலைமுறைக்கு  கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்றார்.

அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்களான சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும்  அவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார்.