செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (14:46 IST)

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள்.! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.! பிரதமர் மோடி ஆதங்கம்..!!

Modi
நாட்டில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்கள் வேதனை அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.  
 
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசிய அவர்,  பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து, இந்தக் கொடுஞ்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார். இன்று செங்கோட்டையில் இருந்து எனது வேதனையை நான் வெளிப்படுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிரான இந்தக் குற்றங்கள் குறித்து நாம் அனைவரும் ஒரு சமூகமாக சிந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  இந்தக் கொடுமைகள் மக்களை கொதிப்படைய செய்துள்ளது என தெரிவித்த அவர், அதனை என்னால் உணர முடிகிறது என்று கூறினார். 

இத்தகைய செயல்களை செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்பதை அறியும் வகையில் செய்ய வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கான தண்டனையை அனைவரும் அறியும் வகையில் செய்ய வேண்டியது இன்றைய அவசியத் தேவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமரின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.