1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (15:03 IST)

ராகுல் காந்திக்கு எனது பங்களாவை தர தயார்: மல்லிகார்ஜுன கார்கே

Mallikarjun Kharge
அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்ய நேர்ந்தால் எனது பங்களாவை அவருக்கு வசிக்க தருவேன் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகாஜூனே கார்கே தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதன் காரணமாக அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் அரசு பங்களாவில் வசித்து வரும் நிலையில் அதனை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது 
 
ராகுல் காந்தி விரைவில் காலி செய்ய உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, ‘ ராகுல் காந்தியை பலவீனப்படுத்த பாஜகவினர் முயற்சி செய்கின்றனர் என்றும் ராகுல் காந்தியை பயமுறுத்தவதை, அச்சுறுத்த முயல்வதை கண்டிக்கிறேன் தெரிவித்தார்.
 
மேலும் நான் வசிக்கும் பங்களா கூட ஆறு மாதங்களுக்கு பிறகு எனக்கு ஒதுக்கப்பட்டது என்றும் ராகுல் காந்தி தனது பங்களாவை காலி செய்துவிட்டு எனது தயார் உடன் என்னுடைய பங்களாவில் அவர் வசிக்கலாம்  அழைக்கலாம் என்றும் அவருக்காக நான் பெற்ற பங்களாவைகாலி செய்ய கூட தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran