வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 25 மே 2022 (15:27 IST)

நேற்றுதான் சொன்னேன், இன்று மீண்டும் ஒரு கொலை: எடப்பாடி பழனிசாமி

Edappadi
தலைநகரம், கொலை நகரமாக மாறி இருக்கிறது என்று நேற்று தான் சொன்னேன் இன்று சென்னையில் மீண்டும் ஒரு கொலை நடந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து,தலைநகர் கொலைநகராக மாறி இருக்கிறது என நேற்று நான் தெரிவித்திருந்த நிலையில்,
நேற்று மாலையே சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவர்  வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார்.
 
இது சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டதையும்
அதன் காரணமாகவே சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதையும் அப்பட்டமாக காட்டுகிறது.  சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா இந்த விடியா அரசு?