1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (17:29 IST)

லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து! – 7 ராணுவ வீரர்கள் பலி!

accident
லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 7 வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் பகுதியில் உள்ள துர்துக் பகுதியில் 24 ராணுவ வீரர்களோடு ராணுவ வாகனம் சென்றுக் கொண்டிருந்தபோது சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 7 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.