செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (21:06 IST)

இந்தியா-பாகிஸ்தான் சம்ஜுதா விரைவு ரயில் ரத்து: இந்தியன் ரயில்வே அதிரடி

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுடனான தொடர்புகள் முறிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களும், பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் இப்போதைக்கு நடைபெற வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் பாகிஸ்தான் வான்படை, இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்க முயற்சிப்பதும், அதனை இந்திய படை முறியடுத்து வருவதுமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் மார்ச் 3 முதல் அதாவது மறுஅறிவிப்பு வரும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வரும் சம்ஜுதா விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.