முஸ்லிமகளை மிரட்டிய மேனகா காந்தி – என்ன செய்கிறது தேர்தல் ஆணையம் ?

Last Modified சனி, 13 ஏப்ரல் 2019 (16:53 IST)
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜகவின் மேனகா காந்திக்கெதிராக தேர்தல் ஆணையம் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை அடுத்து நாடெங்கும் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரச்சாரங்களின் போது தலைவர்கள் பேசும் பல கருத்துகள் சர்ச்சைக்குரியதாக மாறி வருகின்றன. அதிலும் பாஜக தலைவர்கள் சிறுபாண்மை மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பேசி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சுல்தான்பூர் வேட்பாளராகக் களமிறங்கும் மேனகா காந்தி பிரச்சாரத்தின் போது ‘முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கோரிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டியிருக்கும்’ எனப் பேசினார். இந்த விடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ தனது டிவிட்டரில் ‘இதுதான் எல்லை. பாஜக வெளிப்படையாக முஸ்லிம்களை மிரட்டுகிறது. இதையெல்லாம் பார்த்துகொண்டு தேர்தல் ஆணையம் என்ன செய்துகொண்டிருக்கிறது. வெட்கமின்றி இதை அனுமதிக்கிறீர்கள். இந்தக் கானொலியும் பொய் என்று சொல்வீர்களா ?’ எனக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :