திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2024 (14:38 IST)

இன்று மகா அஷ்டமி.. நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு..!

Durga Puja
நவராத்திரியின் எட்டாவது நாளான இன்றும், மகா அஷ்டமி தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில், குறிப்பாக துர்கை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் இன்று மகா அஷ்டமி மற்றும் ஆயுத பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
நவராத்திரியின் எட்டாவது நாள் துர்கா பூஜை நாளாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்கள் கோவில்களிலும் வீடுகளிலும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். 
குஜராத் மாநில மக்கள் துர்கை அம்மனை வழிபட்டு, நடனங்களை ஆடி கடவுளை வழிபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல துர்கை அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்பதும், நாட்டின் பல பகுதிகளில் ராம் லீலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva