புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (15:03 IST)

இரட்டைக்கொலை வழக்கு - சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை

இரட்டைக் கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த 2014-ம் வருடம் டெல்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவர் தனது மனைவியை சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் அடைத்து வைத்து கொன்றதாக புகார் கொடுத்திருந்தார். பிறகு அந்த கொலை வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார் சாமியார். கடந்த 2006-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் இது போன்று உ..பி.யின் லலித்பூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் சாமியார் ராம்பால் மீது புகார் கூறினார். 
 
இந்த இரட்டைக் கொலைகள் தொடர்பாக ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதனால் சாமியாரை கைது செய்ய போலீசார் முற்பட்டனர்.
 
ஆனால், ராம்பாலின் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேர் ஆசிரமத்தில் வாயிலில் அமர்ந்துக் கொண்டு போலீசாரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். பிறகு வேறு வழி இல்லாமல் ஆசிரமத்தின் மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது பெரிய கலவரம்  வெடித்தது அதில்  5 பெண்கள் உட்பட ஒரு குழந்தை என 6 பேர் இறந்தனர்.
 
இதனால் கடந்த  4 ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை கொலைகள் தொடர்பான வழக்கில்  சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் குற்றவாளிகள் என்று ஹரியானாவின் ஹிசார் மாவட்ட நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது.  இதையடுத்து, சாமியார் ராம்பாலுக்கு  ஆயுள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.