போராட்டத்தில் சிவசேனா கலந்துக் கொள்ளாதது ஏன்? காங்கிரஸ் விளக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் சிவசேனா ஏன் கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நேற்று மும்பை ஆகஸ்து கிராந்தி மைதானத்தில் போராட்டம் நடத்திய நிலையில், அதில் சிவசேனா கலந்துக்கொள்ளவில்லை.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ், “தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் கலந்து கொண்டோம். ஒரு வேளை காங்கிரஸ் சார்பாக போராட்டம் நடத்தி இருந்தால் சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்திருப்போம்” என கூறியுள்ளது.