செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:24 IST)

நீரவ் மோடிக்கு டி.ஆர்.டி நோட்டீஸ் – 7000 கோடி மீட்பு நடவடிக்கை

நிரவ் மோடி மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி. இந்திய அளவில் வைரத் தொழில் செய்பவர்களில் முக்கியமானவர். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடியை, எந்த ஆவணங்களும் இல்லாமல் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அந்தப் பணத்தைக் கட்டாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார். இந்த மோசடி குறித்து விசாரிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளது. மேலும் கடனைத் திரும்பப் பெற கடன் மீட்புத் தீர்ப்பாயத்தின் உதவியையும் நாடியது.

நீரவ் மோடியின் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக் குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவருடைய சொத்துக் கள் முடக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் தேடப்படும் பொருளாதார குற்றவாளியாகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நீரவ் மோடியிடம் இருந்து வசூலிக்க வேண்டிய ரூ.7,000 கோடியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் நீரவ் மோடியின் நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி கடனை மீட்க வேண்டி தீர்ப்பாயத்தை அணுகியது. ஆறு மாதம் கழித்து தற்போது நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக இந்த நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நோட்டிஸின் மூலம் நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தவிதமான பணப் பரிவர்த்தனையிலும் ஈடுபட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்த அடுத்தாண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரைக் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.