1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (21:17 IST)

நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம்: ஜனாதிபதி திரெளபதி முர்மு வாழ்த்து!

draupathi
நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட இருக்கும் நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு  அவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது. விநாயகப் பெருமான், விக்னஹர்தராகவும், மங்கலமூர்த்தியாகவும் கருதப்படுகிறார். 
 
இந்த தருணத்தில் அன்பு, அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம்." என தெரிவித்துள்ளார்