ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (16:04 IST)

முழுமுதல் கடவுள் விநாயகரின் பிறந்த தினம் எது...?

Lord Ganesha 2
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று அவதரித்த முழுமுதல் கடவுள் விநாயகரின் பிறந்த தினம் விநாயகர் சதூர்த்தி என, கொண்டாடப்படுகிறது.


விநாயகப் பெருமான் விக்னங்கள், தடை, தடங்கல், அனைத்தையும் நீக்குபவர். எல்லோருக்கும் மூத்தவர், முதல்வர், ஞான பண்டிதர். விநாயகர் அஷ்டோத்திரத்தில் வரும், ஓம் அநீஸ்வராய நம என்ற ஒரு வரிக்கு ஏற்ப, தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர்.

பார்கவ புராணத்தின்படி விநாயகரே முழு முதல் கடவுளாக, இந்த உலகை படைத்து, அதில், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களை செய்ய மும்மூர்த்திகளையும் படைத்தவர் ஆவார்.

வியாசர் சொல்ல சொல்ல ஸ்ரீமகாபாரதத்தைத் தன் கொம்பை உடைத்து எழுதினார் விநாயகப் பெருமான். தனக்கான இருப்பிடத்தைக் கூட மிக எளிமையாக அமைத்துக்கொண்டவர். அரசமரத்தடி முதல் நாம் உள்ளன்போடு நினைத்தால் உடனே காட்சி தர தெரு முனை முதற்கொண்டு வளம் வருபவர்.

பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்தாலும் அதிலும் காட்சி தரும் தெய்வம். தன்னை துதிப்போரின் சங்கடங்களை நீக்கியருளும் முழுமுதற் கடவுள். அவரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் கிட்டும்.