வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (09:24 IST)

வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை: வில்லன் நடிகரின் மனைவி, மகன் கைது

வரதட்சணை கொடுமையால் பிரபல வில்லன் நடிகரின் மருமகள் தற்கொலை செய்த நிலையில் அவருடைய மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் வில்லன் நடிகராக நடித்தவர் ராஜன் பி தேவ். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் அவரது மகன் உன்னி என்பவருக்கும் பிரியங்கா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது
 
100 பவுன் தங்க நகை உள்ளிட்ட பொருட்களுடன் வரதட்சணையாக வந்த பிரியங்காவை மேலும் வரதட்சணை கேட்டு உன்னியும் அவருடைய தாயார் சாந்தமாகவும் கொடுமை படுத்தியதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் மன அழுத்தத்துக்கு ஆளான பிரியங்கா தற்கொலை செய்து கொண்டர். தற்கொலை செய்து தனது மரணத்திற்கு சாந்தம்மா மற்றும் உன்னி தான் காரணம் என்றும் பிரியங்கா கடிதம் எழுதி வைத்திருந்தார்
 
இந்த கடிதத்தின் அடிப்படையில் உன்னி மற்றும் சாந்தம்மா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் பிரபல வில்லன் நடிகரின் மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.