1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 மே 2021 (08:40 IST)

தீவிர புயலாக வலுப்பெற்றது டவ்-தே! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அரபிக்கடலில் உருவான டவ்-தே பியல் தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலானது தற்போதைய நிலவரப்படி கோவாவின் பனாஜி நகரிலிருந்து 190 கி.மீட்டர் தென்மேற்கில் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ள டவ்-தே அடுத்த 12 மணி நேரத்திற்குள் அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே இந்த புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் கரையை கடக்கும் முன்னதாக தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழக மேற்கு தொடர்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் கனமழை, நிலச்சரிவு போன்றவை ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.