1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (08:21 IST)

உள்நாட்டு விமான போக்குவரத்து 72 % அதிகரிப்பு!

சர்வதேச விமான சேவை தடைபட்டிருந்தாலும் உள்நாட்டு விமான போக்குவரத்தை 72 சதவீதமாக மத்திய அமைச்சகம் அதிகரித்துள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் சர்வதேச விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் உலக நாடுகள் பலவும் இந்தியாவுடனான விமான சேவைகளை தடை செய்து அறிவித்திருந்தன.
 
இந்நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்தை 72 சதவீதமாக விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 65 சதவீதமாக இருந்தது. சர்வதேச விமான சேவை தடைபட்டிருந்தாலும் உள்நாட்டு சேவைகள் படிப்படியாக சீரடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.