டெல்லியில் மருத்துவரை சுட்டு கொலை செய்தது சிறுவர்களா? அதிர்ச்சி தகவல்..!
டெல்லியில் உள்ள மருத்துவமனையில் நேற்று, ஒரு மருத்துவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலையை செய்தவர்கள் இரண்டு சிறுவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள நீமா மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென இரண்டு மர்ம நபர்கள் சிகிச்சைக்காக வருவதாக கூறி, மருத்துவர் ஜாவித்தை சந்திக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது, மருத்துவமனை ஊழியர்கள் இருவரையும் அவரது அறைக்கு அனுப்பியபோது, சில நிமிடங்களில் அந்த மர்ம நபர்கள் மருத்துவர் ஜாவித்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய டெல்லி போலீஸ், விசாரணை செய்து வந்த நிலையில், இந்த கொலையைச் செய்தவர்கள் இரண்டு சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. கொலையில் ஈடுபட்ட ஒரு சிறுவனை போலீசார் கைது செய்ததாகவும், அந்த சிறுவன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னொரு சிறுவனை போலீசார் தேடி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொலையின் காரணம் குறித்து இன்னும் சிறுவர்களிடம் விசாரணை நடக்கவில்லை, ஆனால் விசாரணையின் பின்னர் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran